Saturday, June 12, 2010

மொழி வேறுபாடு

இயற்கை மொழிக்கும் ஒலி, ஒளி, காற்று என்பதுதான் ஆணிவேர், பக்கபலம் வேர், சல்லி வேர். இம்மூவேரைத் தவிர, வேறு வேர்கள் ஏதும் இயற்கை மொழிக்குக் கிடையாது. அதனால் Where என்று தேடினாலோ, Here என்று தேடினாலோ There என்று தேடினாலோ Hireக்குக் கூடக் கிடைக்காது. உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஒலி மொழிகள் தான் உண்டு. மனித இனத்திற்கு மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மொழிகள் இருப்பதால் மனிதனின் மொழியை மனிதனே புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. அதே சமயத்தில் காட்டில் வாழும் மனிதர்கள் பல உயிரினங்களின் மொழியைக் கற்று வைத்திருப்பதால் ஒலியை எழுப்பி மிருகங்களுக்குப் புரியும்படி பேசுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. அதனால் ஒலியை உணர்நதால் உலகில் அனைத்து உயிரினங்களின் மொழியையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தமிழ்மொழி கூறுகிறது.

இயற்கை மொழி

ஒலி, ஒளி, காற்று இம்மூன்றும் தான் இயற்கை மொழி. இயற்கை மொழிக்கு ஒலியே ஆணி வேராக இருக்கிறது. ஒளி பக்கபலமுள்ள வேராகவும், காற்று நாற்றத்தை உணரும் சல்லி வேராகவும் இருந்து உடல் மொழி மரமாக உதவுகிறது. காற்றில் வரும் நாற்றம் விரும்பும்படி இருந்தால் அது உடலுக்கு நன்மை செய்யும். நாற்றம், துர்நாற்றமாக வந்தால், அது உடலுக்குத் தீங்கு செய்யும். துர்நாற்றம் என்பது நமக்கு விரோதி தான். நமக்கு வியாதியைத் தந்துவிட்டுப் போவதுதான். இருப்பினும் வியாதி விதிப்படி எச்சரிக்கிறது. விலகிப் போய்விடு, இல்லாவிட்டால், நீ சீரிழந்து சீரழிந்து போக நேரிடும் என்று எச்சரிப்பதால், துர்நாற்றம் என்னும் பரம விரோதி போக நேரிடும் என்று எச்சரிப்பதால், துர்நாற்றம் என்னும் பரம விரோதி மீது குறை சொல்வதில் நியாயமில்லை. துர்நாற்றத்தை அலட்சியம் செய்தவர்கள் யாரும் சுகமாகப் பிழைத்ததாக சரித்திரம் கிடையாது.

அதனால் கண், காது அறியாததையும், மூக்கு ரேடார் போல உணர்ந்து கூறுவதையும் ஏற்றுக் கொள்வது தான் வியாதியின்றி வாழ உதவும். இயற்கை மொழிபெயர்ப்பு செய்து தராவிட்டால், தாவரங்கள் கூட உயிர் பிழைப்பது கடினம் தான். ஏனென்றால் துர்நாற்றம் என்பது கொல்ல வரும் கிருமிகள் என்பதால், குஷ்டரோகிகள் என்பதால் தாவரங்களுக்கும் நோய் பரவி விடும் என்பதால், சுற்றுச்சூழல் நன்கு அமைந்தால் தான் உலகம் வாழும் என்று இயற்கையை பின்னணியாகக் கொண்டுள்ள தமிழ்மொழி கூறுகிறது.

மொழி என்பது என்ன?

மொழி என்பது, ஒலியை மூலமாகக் கொண்டு உணர்வை வெளிப்படுத்திய பின் ஒழிந்து போகிறது. தீக்குச்சியைப் போல ஒலியை உணர்ந்த உடல் விளக்கு, செயலை ஒளி வழியாக வெளிப்படுத்துகிறது. ஒலி இல்லாமல் ஒளி பிறக்காது. ஒலி இல்லாமல் மொழி பிறக்காது. தூங்கும் பொழுது எழும்பும் ஒலி உணர்வு, காது கேட்டு உணரும்படி செய்கிறது. பிறகு ஒளி வழியே, கண் பார்த்து உணர்கிறது. ஒலியைக் காது உணராத பொழுது தொடு உணர்வு, கேளா ஒலியாக (அதிர்வாக) மூளையை உணரச் செய்கிறது. ஒலி எழாமலே, கண் பார்த்து உணராமலே, மூக்கு சுவாசம் நாற்றத்தை நல்லதா, கெட்டதா என்று உணரச் செய்கிறது. இதனால் ஒலி, ஒளி, காற்று என்றுமே உயிரியலுக்கு அடிப்படை. கேளா அதிர்வு, நரம்பு வழியே, காது வழியே, கண் வழியே, மூக்கு வழியே இயற்கை மொழியை மொழி பெயர்த்துத் தந்து உதவுகிறது.

இதயத்தின் ஒலி தொடரும் வரை உள் மனம், வெளி மனத்தை உணரும்வரை தொடு உணர்வும், பிறர் உணரா மொழியில் உயிருள்ளவரை மொழியை உணர்கிறது. பிறர் அறியா உணர்வை, அரிதாக உணரும் மொழிதான் தொடு உணர்வு மொழியாகும். தொடு உணர்வை இழந்து விட்டால் இயற்கை மொழி உடலுக்குப் புரியும்படி மொழி பெயர்ப்பு செய்ய இயலாது. இதய ஒலி நின்று விட்டால், உடல் ஒளி இழந்து விடும், மனம் காற்றின் மணத்தை உணர இயலாமல் போய்விடும். இந்நிலை மொழி இழப்பின் காரணமாக உடல் ம் + ஒழி என்று ஒழிந்து, அழிந்து, மண்ணில் புதையுண்டு ஆழ்ந்து போகிறது. உயிருள்ள வரை தான் ஆள முடியும். இதய ஒலி உள்ளவரைதான் உயிர் வாழ்ந்து ஆள முடியும்.

எங்கிருந்து வந்தது ஆங்கிலம்

உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வீணான சந்தேகங்கள் எழாமலிருக்கும். வீணான சந்தேகம் எழுந்தால், வீணான எதிர்மறைச் செயல்கள் தொடர்கதையாகி விடும். பிறகு அமைதியானாலும் அது தற்காலிகமாக மட்டுமே இருக்கும். இதனால் அரிதான மானிடப் பிறவி, உலகை அறியாமலே இருந்து இறப்புப் போலவே நித்தியகண்டம் பூர்ண ஆயுசு என்றாகி விடும்.

அதனால் மொழி எதுவானாலும் அதைத் தரம் தாழ்த்திப் பேசக்கூடாது. அதே சமயம் அவரவர் மொழியின் திறம் பற்றிப் பேசலாம். இதை மாற்று மொழியினர் ஏற்பதும், ஏற்காததும் அவரவர்க்கு உரிமையுண்டு. நல்லதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். புரியாவிட்டால் விட்டு விடலாம். சரியில்லையென்றால் மறுத்து விடலாம். எதுவாயிருப்பினும் இயற்கையுடன் ஒத்துப்போகும் மொழிதான் வளரும், வாழும். வேரில்லாத மொழிகள் விளைச்சலைத் தராமல், வேறு வேலைக்குப் பயன்படும் மரம்போலத்தான் என்று உதாரணம் கூறலாம்.

வேருள்ள மரம் விளைச்சலைத் தரும் மரம். வேரில்லாத மரம் கட்டடம் போலப் பயன்படும். ஆனால் தானாக உயராது.

Futureக்கு Nature மரம் வேண்டும்.
Furnitureக்கு Untrue மரம்தான் வேண்டும்.
Untrue மரம் Pictureக்கு Frame போடத்தான் பயன்படும்.