Saturday, June 12, 2010

மொழி என்பது என்ன?

மொழி என்பது, ஒலியை மூலமாகக் கொண்டு உணர்வை வெளிப்படுத்திய பின் ஒழிந்து போகிறது. தீக்குச்சியைப் போல ஒலியை உணர்ந்த உடல் விளக்கு, செயலை ஒளி வழியாக வெளிப்படுத்துகிறது. ஒலி இல்லாமல் ஒளி பிறக்காது. ஒலி இல்லாமல் மொழி பிறக்காது. தூங்கும் பொழுது எழும்பும் ஒலி உணர்வு, காது கேட்டு உணரும்படி செய்கிறது. பிறகு ஒளி வழியே, கண் பார்த்து உணர்கிறது. ஒலியைக் காது உணராத பொழுது தொடு உணர்வு, கேளா ஒலியாக (அதிர்வாக) மூளையை உணரச் செய்கிறது. ஒலி எழாமலே, கண் பார்த்து உணராமலே, மூக்கு சுவாசம் நாற்றத்தை நல்லதா, கெட்டதா என்று உணரச் செய்கிறது. இதனால் ஒலி, ஒளி, காற்று என்றுமே உயிரியலுக்கு அடிப்படை. கேளா அதிர்வு, நரம்பு வழியே, காது வழியே, கண் வழியே, மூக்கு வழியே இயற்கை மொழியை மொழி பெயர்த்துத் தந்து உதவுகிறது.

இதயத்தின் ஒலி தொடரும் வரை உள் மனம், வெளி மனத்தை உணரும்வரை தொடு உணர்வும், பிறர் உணரா மொழியில் உயிருள்ளவரை மொழியை உணர்கிறது. பிறர் அறியா உணர்வை, அரிதாக உணரும் மொழிதான் தொடு உணர்வு மொழியாகும். தொடு உணர்வை இழந்து விட்டால் இயற்கை மொழி உடலுக்குப் புரியும்படி மொழி பெயர்ப்பு செய்ய இயலாது. இதய ஒலி நின்று விட்டால், உடல் ஒளி இழந்து விடும், மனம் காற்றின் மணத்தை உணர இயலாமல் போய்விடும். இந்நிலை மொழி இழப்பின் காரணமாக உடல் ம் + ஒழி என்று ஒழிந்து, அழிந்து, மண்ணில் புதையுண்டு ஆழ்ந்து போகிறது. உயிருள்ள வரை தான் ஆள முடியும். இதய ஒலி உள்ளவரைதான் உயிர் வாழ்ந்து ஆள முடியும்.

1 comment: