Saturday, June 12, 2010

இயற்கை மொழி

ஒலி, ஒளி, காற்று இம்மூன்றும் தான் இயற்கை மொழி. இயற்கை மொழிக்கு ஒலியே ஆணி வேராக இருக்கிறது. ஒளி பக்கபலமுள்ள வேராகவும், காற்று நாற்றத்தை உணரும் சல்லி வேராகவும் இருந்து உடல் மொழி மரமாக உதவுகிறது. காற்றில் வரும் நாற்றம் விரும்பும்படி இருந்தால் அது உடலுக்கு நன்மை செய்யும். நாற்றம், துர்நாற்றமாக வந்தால், அது உடலுக்குத் தீங்கு செய்யும். துர்நாற்றம் என்பது நமக்கு விரோதி தான். நமக்கு வியாதியைத் தந்துவிட்டுப் போவதுதான். இருப்பினும் வியாதி விதிப்படி எச்சரிக்கிறது. விலகிப் போய்விடு, இல்லாவிட்டால், நீ சீரிழந்து சீரழிந்து போக நேரிடும் என்று எச்சரிப்பதால், துர்நாற்றம் என்னும் பரம விரோதி போக நேரிடும் என்று எச்சரிப்பதால், துர்நாற்றம் என்னும் பரம விரோதி மீது குறை சொல்வதில் நியாயமில்லை. துர்நாற்றத்தை அலட்சியம் செய்தவர்கள் யாரும் சுகமாகப் பிழைத்ததாக சரித்திரம் கிடையாது.

அதனால் கண், காது அறியாததையும், மூக்கு ரேடார் போல உணர்ந்து கூறுவதையும் ஏற்றுக் கொள்வது தான் வியாதியின்றி வாழ உதவும். இயற்கை மொழிபெயர்ப்பு செய்து தராவிட்டால், தாவரங்கள் கூட உயிர் பிழைப்பது கடினம் தான். ஏனென்றால் துர்நாற்றம் என்பது கொல்ல வரும் கிருமிகள் என்பதால், குஷ்டரோகிகள் என்பதால் தாவரங்களுக்கும் நோய் பரவி விடும் என்பதால், சுற்றுச்சூழல் நன்கு அமைந்தால் தான் உலகம் வாழும் என்று இயற்கையை பின்னணியாகக் கொண்டுள்ள தமிழ்மொழி கூறுகிறது.

No comments:

Post a Comment